ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் பேசவில்லை 3 கட்சிகள் சேர்ந்து நிலையான அரசை அமைப்போம் சரத்பவார் பேட்டி
ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் பேசவில்லை என்றும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் 3 கட்சிகளும் சேர்ந்து நிலையான அரசை அமைக்கும் என்று சரத்பவார் கூறினார்.
மும்பை,
ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் பேசவில்லை என்றும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் 3 கட்சிகளும் சேர்ந்து நிலையான அரசை அமைக்கும் என்று சரத்பவார் கூறினார்.
சரத்பவார் பேட்டி
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி வருகின்றன. இந்தநிலையில், நாக்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அங்கு பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பயிர்கள் நாசம் அடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பயிர்ச்சேதம் குறித்து கேட்டறிந்தார்.
இது தொடர்பாக நிவாரண உதவி கிடைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவேன் என அவர் விவசாயி களிடம் கூறினார்.
பின்னர் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நிலையான அரசாங்கம்
மராட்டியத்தில் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. வளர்ச்சி சார்ந்த நிலையான அரசாங்கத்தை அமைக்க மூன்று கட்சிகளும் விரும்புகிறோம்.
புதிதாக அமைக்கப்படும் எங்களது அரசாங்கம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இதை நாங்கள் அனைவரும் உறுதி செய்வோம்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அரசாங்கம் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். அவரை எனக்கு சில ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் ஒரு ஜோதிட மாணவர் என்பதை நான் அறியவில்லை.
நான் மீண்டும் வருவேன், நான் மீண்டும் வருவேன் என்று அவர் கூறினார். ஆனால் நீங்கள் (நிருபர்கள்) வேறொரு தகவலை கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதச்சார்பின்மையை வலியுறுத்துவோம்
ஆட்சி அமைக்கும் போது சிவசேனா இந்துத்வாவை வலியுறுத்தினால் உங்களது கட்சி அதை ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்பவார், “காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் எப்போதும் மதச்சார்பின்மை பற்றியே பேசும். நாங்கள் முஸ்லிம், இந்து, புத்தமதம் என எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒரு அரசாங்கத்தை நடத்தும்போது மதச்சார்பின்மையை வலியுறுத்துபவர்கள் நாங்கள்” என்றார்.
பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் பேசி வருகிறதா என்ற கேள்வியை நிராகரித்த சரத்பவார், நாங்கள் சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் மட்டும் தான் பேசி வருகிறோம் என்று பதில் அளித்தார்.
Related Tags :
Next Story