2019-20-ம் நிதியாண்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 4,344 பேருக்கு திருமண நிதிஉதவி - கலெக்டர் தகவல்


2019-20-ம் நிதியாண்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 4,344 பேருக்கு திருமண நிதிஉதவி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2019 11:00 PM GMT (Updated: 15 Nov 2019 11:41 PM GMT)

2019-20-ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 4,344 பேருக்கு திருமண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-2017-ம் வரையிலான நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 19,576 பேர், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 10,068 பேர் என மொத்தம் 29,644 பெண்களுக்கு ரூ.94 கோடியே 77 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியையும், 4 கிராம் தங்கம் வீதம் 118.576 கிலோ அளவிலான தங்கமும் வழங்கப்பட்டது.

மேலும் 2016-2019 நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 7,912 பேர், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 6,814 பேர் என மொத்தம் 14,726 பெண்களுக்கு ரூ.53 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நிதிஉதவியையும், 8 கிராம் தங்கம் வீதம் 117.808 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.

தற்போது 2019-20-ம் நிதியாண்டில் 10-ம் வகுப்பு படித்த 2,008 பேர், பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த 2,336 பேர் என மொத்தம் 4,344 பெண்களுக்கு ரூ.16 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நிதிஉதவியும், 8 கிராம் தங்கம் வீதம் 34.752 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story