சிறையில் இருந்து சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீனில் விடுதலை


சிறையில் இருந்து சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 17 Nov 2019 4:30 AM IST (Updated: 16 Nov 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறையில் இருந்து சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீனில் விடுதலையானார்.

திருச்சி, 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முகிலன். பாலியல் புகாரில் கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் முகிலன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு கடந்த 13-ந் தேதி உத்தர விட்டது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறைக்கு நேற்று மதியம் வந்தது. இதையடுத்து முகிலன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த முகிலன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட பிரதமர் மோடி வருவதாக கூறப்படுகிறது. அவர் வருகை கண்டனத்துக்குரியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாட்டில் உண்மையை பேசினால் போராளிகளுக்கு அழிவு தான். சமூக நீதிக்கான போராட்டம் தொடரும்” என்றார்.

Next Story