விழுப்புரத்தில் நாளை முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் - அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்


விழுப்புரத்தில் நாளை முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் - அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்
x
தினத்தந்தி 17 Nov 2019 4:15 AM IST (Updated: 17 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நாளை முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

விழுப்புரம், 

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதல்-அமைச்சரின் குறைதீர்வு கூட்டம் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Next Story