வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2019 4:00 AM IST (Updated: 17 Nov 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

வெள்ளகோவில், 

வெள்ளகோவில் சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இ்வரது மகன் மணிவேல் (வயது33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெற்றோருடன் வசித்தபடி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிவேல் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை 6 மணிக்கு மணிவேலின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மணிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story