கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது
கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
உடல் மீட்பு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது31). இவருடைய மனைவி ரஞ்சு (23). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி 2 பேரும் நவிமும்பை தலோஜா செக்டர் 20-ம் எண் பகுதியில் உள்ள வீட்டில் குடியேறினர். மனோஜின் ஊரை சேர்ந்த கார்த்திக் (26) என்ற வாலிபரும் அவருடன் மும்பை வந்து பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில்,சம்பவத்தன்று அப்பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் பகுதியில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதையடுத்து கட்டுமான தொழிலாளிகள் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பையை பிரித்து பார்த்தனர். இதில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கள்ளத்தொடர்பு
இதில் பிணமாக கிடந்தது ரஞ்சுவின் கணவர் மனோஜ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரஞ்சுவிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ரஞ்சுவிற்கு அவர்களுடன் வந்த கார்த்திக்கிடம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இதுபற்றி அறிந்த மனோஜ் அவரை பிடித்து சத்தம்போட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், ரஞ்சுவுடன் சேர்ந்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனோஜை தலையணையால் அமுக்கிகொலை செய்தனர்.
2 பேர் கைது
பின்னர் உடலை மறைக்க 2 பேரும் சணல் கோணிப்பையில் மறைத்து அங்கு வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சுவை கைது செய்தனர். மேலும் சொந்த ஊருக்கு தப்பி செல்ல முயன்ற கார்த்திக்கையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story