ஆட்சி அமைப்போம் என கூறியதன் மூலம் பா.ஜனதாவின் குதிரைபேரம் அம்பலமாகி உள்ளது சிவசேனா தாக்கு
ஆட்சி அமைப்போம் என கூறியதன் மூலம் பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவது அம்பலமாகி உள்ளது என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
ஆட்சி அமைப்போம் என கூறியதன் மூலம் பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவது அம்பலமாகி உள்ளது என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
பாரதீய ஜனதாவின் திடீர் அறிவிப்பு
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் விரைவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று முன்தினம் தெரிவித்தார். இது சிவசேனா அதன் புதிய கூட்டணி கட்சிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
குதிரைபேரம்
மராட்டியத்தில் புதிய அரசியல் சமன்பாடு பலருக்கு வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது. 105 இடங்களை வைத்திருப்பவர்கள் முன்பு கவர்னரிடம் தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி ஆட்சி அமைக்க மறுத்தனர். இப்போது எப்படி ஆட்சி அமைப்போம் என்று அவர்கள் கூறுகிறார்கள்?
ஜனாதிபதி ஆட்சி என்ற போர்வையில் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவது தற்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிப்படையான ஆளுமைக்கு உறுதியளித்தவர்களின் பொய்கள் இப்போது தெளிவாகி வருகிறது. நெறிமுறையற்ற வழிகள் அரசின் பாரம்பரியத்துக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நிதின் கட்காரிக்கு பதிலடி
மேலும் கிரிக்கெட்டை போல தான் அரசியலும், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று கூறிய மத்திய மந்திரி நிதின் கட்காரி கருத்துக்கும் சாம்னாவில் சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.
“கிரிக்கெட், விளையாட்டு என்பதை விட வியாபாரமாகி விட்டது. அதிலும் குதிரைபேரம், சூதாட்டம் நடைபெறுகிறது. இதனால் மராட்டிய அரசியலை கிரிக்கெட்டுன் நிதின் கட்காரி ஒப்பிட்டது சரியானது தான்” என பாரதீய ஜனதாவை தாக்கி சாம்னாவில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story