கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு: 10 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு: 10 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2019 4:00 AM IST (Updated: 18 Nov 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சரவணம்பாக்கம், பெரியசெவலை, டி.கொளத்தூர், கொண்டசமுத்திரபாளையம், ஒட்டனந்தல், பூசாரிபாளையம், ஆமூர், ஆமூர்குப்பம், துலங்கம்பட்டு, கோவுலாபுரம் ஆகிய கிராமங்கள் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் சேர்க்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் கடந்த 3 நாட்களாக 10 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதையொட்டி சரவணம்பாக்கம் கூட்டு சாலையில் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, உதயசூரியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், துரைராஜ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் எத்திராஜ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பா.ம.க. ஒன்றிய செயலாளர் கோபி, இளைஞரணி செயலாளர் அஜித், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் செந்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராதாகிரு‌‌ஷ்ணன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

Next Story