நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் - தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நாடு தழுவியஅளவில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை புதுவையில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கநிர்வாகிகள்ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
கட்டாய ஆட்குறைப்பு, லே-ஆப், ஆலைகள் மூடல், வேலையிழப்பு, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு சட்டங்கள் முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தம், போராட்டங்கள் மீது அடக்குமுறை, பெருநிறுவன முதலாளிகளுக்கு சலுகை, நிலம் கையகப்படுத்தி வழங்குதல், பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைப்பு, தனியார் மயம், பொருளாதாரம் படு வீழ்ச்சி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி் 8-1-2020 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தினை புதுவையில் வெற்றி பெறச்செய்வது தொடர்பான தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை முதலியார்பேட்டை ரோடியர் மில் வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், சி.ஐ.டி.யு. தலைவர் சீனுவாசன், ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், 8-1-2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தை புதுவையில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜனவரி மாதம் 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கோரிக்கையை விளக்கி கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story