மாவட்ட செய்திகள்

குடவாசல் - வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் காமராஜ் பங்கேற்பு + "||" + Kudavasal - Valangaimana Welfare Program Assistance Ceremony Minister Kamaraj Participates

குடவாசல் - வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

குடவாசல் - வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
குடவாசல் மற்றும் வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
குடவாசல்,

குடவாசல் மற்றும் வலங்கைமானில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 1,993 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


ஏழை, எளிய மக்களை பாதுகாக்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் அனைத்து மக்களிடமும் பாராட்ட பெற்ற திட்டமாக அமைந்துள்ளது.

முன்னோடி திட்டம்

ஏனென்றால் அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களை தேடி அரசு என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. ஒரு திட்டமென்றால் பெயரளவிற்கு இருந்து விடாமல் மக்களிடையே பெயர் சொல்கின்ற திட்டமாக இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியை பின்பற்றி மக்களிடையே பெயர் சொல்கின்ற பாராட்ட பெறுகின்ற முன்னோடி திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு
ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசினார்.
2. ‘ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
3. தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் சரோஜா தகவல்
தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.
4. கோவை மாநகராட்சியில் மக்காத கழிவுகளை சேகரிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
கோவை மாநகராட்சியில் மக்காத கழிவுகளை சேகரிப்பதற்காக 5 புதிய வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
5. காரைக்காலில் நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் திறப்பு அமைச்சர் தகவல்
காரைக்காலில் பணிகள் முடிந்த நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.