இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி


இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 20 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையை காட்டாரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்குள்ள சாலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிப்காட் சார்பில் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலைகளில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிகாட் தொழிற்சாலையில் இரவு பணி முடித்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிய அமரம்பேடு பகுதியை சேர்ந்த டெல்லி கணேஷ் சிப்காட் சாலை பள்ளத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சாலையில் உள்ள பள்ளத்தால் அந்த வழியாக செல்லும் வாகனங்களும் பழுதாகி நின்று விடுகிறது. சிபிகாட் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிபிகாட் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story