தஞ்சையில், 24-ந் தேதி நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு 400 பேர் எழுதுகின்றனர்


தஞ்சையில், 24-ந் தேதி நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு 400 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 7:24 PM GMT)

தஞ்சையில் வருகிற 24-ந் தேதி நடக்கும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வை 400 பேர் எழுதுகின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உரிமையியல் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 400 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்தநிலையில் தேர்வு மையத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தேர்வு எழுதுபவர்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தடையில்லா மின்சாரம்

தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தேர்வு நிகழ்வுகள் கேமராக்களில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story