நடைபாதையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு ‘மகாவீர்’ என பெயர் சூட்டப்பட்டது


நடைபாதையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு ‘மகாவீர்’ என பெயர் சூட்டப்பட்டது
x
தினத்தந்தி 22 Nov 2019 3:46 AM IST (Updated: 22 Nov 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடைபாதையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ’மகாவீர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு வசந்தநகர் 10-வது கிராசில் உள்ள நடைபாதை பகுதியில் ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த அப்சல் என்பவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் குழந்தையின் உடல் நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும், குழந்தை பிறந்து 6 நாட்கள் இருக்கும் என தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு ஒரு நாள் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஐகிரவுண்ட் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் அந்த குழந்தைக்கு ‘மகாவீர்’ என பெயர் சூட்டினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை நடைபாதையில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பிறந்து 6 நாட்கள் ஆன ஆண் குழந்தையை வீசி சென்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story