கிண்டியில் வங்கியில் தீ விபத்து


கிண்டியில் வங்கியில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 Nov 2019 4:13 AM IST (Updated: 22 Nov 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள சின்னமலை அண்ணாசாலை விஜயா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி சின்னமலை அண்ணாசாலையில் விஜயா வங்கி உள்ளது. நேற்று காலை வங்கி ஊழியர், வங்கியின் முன்பக்க கதவை திறந்தார். அப்போது வங்கியின் உள்ளே இருந்து புகை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கியின் உள்ளே தீப்பிடித்து எரிவது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி வங்கியில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் வங்கி மேலாளர் அறை, முன்பக்க அறை சேதம் அடைந்தது. லாக்கர் இருக்கும் அறைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story