திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை சாவு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை திடீர் என இறந்து போனது. இதையடுத்து குழந்தையின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி,
திருத்தணியை அடுத்த கோதண்டராமாபுரம் காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 30). இவரது மனைவி சோனியா (21). பிரசவத்துக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சோனியாவுக்கு கடந்த 18-ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைக்கு போட்ட தடுப்பூசியால்தான் குழந்தை இறந்தது என்று கூறி திருத்தணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்கள்.
திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story