சுழற்சி முறையில் தேசியவாத காங்கிரசுக்கும் முதல்-மந்திரி பதவியா? சஞ்சய் ராவத் பதில்
சுழற்சி முறையில் தேசியவாத காங்கிரசுக்கும் முதல்-மந்திரி பதவியில் பங்கு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலளித்தார்.
மும்பை,
பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல் 2½ ஆண்டுகள் சிவசேனாவும், அடுத்த பாதியில் தேசியவாத காங்கிரசும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ளும் என தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவி சுழற்சி முறையில் அளிக்கப்படுவது குறித்து எனக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. புதிய அரசில் யார் முதல்-மந்திரி பதவியை ஏற்பார் என்பதை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள். அனைத்து சிவசேனா தொண்டர்களும், பொதுமக்களும் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை நேர்மறையாக சென்றுகொண்டு இருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும். மக்களின் நலனுக்காக 5 ஆண்டுகள் நிலையான அரசை உருவாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story