பனித்திட்டு கிராமத்தில் உலக மீனவர் தின நிகழ்ச்சி அமைச்சர் கந்தசாமி பங்கேற்பு


பனித்திட்டு கிராமத்தில் உலக மீனவர் தின நிகழ்ச்சி அமைச்சர் கந்தசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 5:48 AM IST (Updated: 22 Nov 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே பனித்திட்டு மீனவ கிராமத்தில் உலக மீனவர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு சங்க கொடியேற்றி வைத்தார்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பனித்திட்டு மீனவ கிராமத்தில் உலக மீனவர் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து மீனவர்களின் உரிமைக்காக போராடிய தலைவர்கள் படத்திற்கு மரியாதை மீனவர்கள் செய்தனர். இதில் மீனவ பஞ்சாயத்து மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோனறு நரம்பை, மு.புதுக்குப்பம், நல்லவாடு, பூ.புதுக்குப்பம், ஆகிய மீனவ கிராமங்களிலும் உலக மீனவர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வீராம்பட்டினத்தில் உலக மீனவர் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதையொட்டி கோவில் தெப்ப குளம் அருகே கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில மீனவர் சங்க தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோவிந்தராசு, சட்ட ஆலோசகர் குலோத்துங்கன், துணைத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைப்பொதுச்செயலாளர் ரத்தினவேலு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மீனவர் சங்க நிர்வாகிகள் பேசும்போது, இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு அரசு சார்பில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்த சமயத்தில் படகு குகள், மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படும் சேதத்திற்கும் உடனடியாக நஷ்ட ஈடு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்..

நிகழ்ச்சியின்போது சங்கத்தின் கவுரவத்தலைவர் மறைந்த பலராமனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் மீனவர் சங்க பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.


Next Story