மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2019 4:15 AM IST (Updated: 22 Nov 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர், 

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும், ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கலைச்செல்வன், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாஞ்சி.வரதராஜன், நிர்வாகிகள் ராமசாமி, குணா பரமேஸ்வரி, மாநகர, மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள்் கலந்து கொண்டனர்.

Next Story