உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரியாபட்டி,
காரியாபட்டியில் அ.தி. மு.க. கிழக்கு,மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:- காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 36 ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர், 30 பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பதவிகள் உள்ளன.
இந்த பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சரியான ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அவருக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
தி.மு.க.வினர் வெற்றிக்கு எந்த இடத்திலும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற நிர்வாகிகள், தொண்டர்கள் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாவட்ட கழக பொருளாளர் சித்தனேந்தல் தேவர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்ன போஸ், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் ஆவியூர் ரமேஷ், ஆவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய அவை தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முத்துப்பாண்டி, காரியாபட்டி பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் வேங்கைமார்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருநாவுக்கரசு, குரண்டி ஆறுமுகம், சத்திரம் புளியங்குளம் திருச்செல்வம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய பேரவை செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் வையம்பட்டி மணி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தர்மராஜன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆவியூர் குமார், ஒன்றிய பேரவை செயலாளர் அபிஷேக், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய மாணவரணி செயலாளர் வரதராஜன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராமநாதன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் அழகு, ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அம்மையப்பன், ஒன்றிய மாணவரணி இணைச்செயலாளர் பாம்பாட்டி மதுக்குமார், கிழவனேரி கார்த்திக் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல காரியாபட்டி பேரூர் கழகத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் விஜயன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் தர்மராஜன், ஒன்றிய அ.தி.மு.க. சார்பு அணி செயலாளர்கள் அபிஷேக் ஆதித்தன், திருநாவுக்கரசு, பாண்டியராஜன், ஆறுமுகம், வரதராஜன், ராமநாதன்,அழகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story