கிருஷ்ணகிரியில் 360 பேருக்கு ரூ.14¼ லட்சத்தில் தென்னை மரம் ஏறும் கருவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 360 பேருக்கு ரூ.14¼ மதிப்பில் தென்னை மரம் ஏறும் கருவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தேசிய தேங்காய் வளர்ச்சி வாரியம் சார்பில் 360 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தென்னை மரம் ஏறும் கருவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தேசிய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக மாவட்டத்தில் 360 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான தென்னை மரம் ஏறும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியை பெற்றவர் களுக்கு கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையத்தில் 6 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பயிற்சியாளர்களுக்கு இதன் மூலம் தென்னை சாகுபடி, தொழில் நுட்பம், ரக தேர்வு, உரம் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட தொழில் நுட்ப பயிற்சிகள் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. தென்னை மரம் ஏறும் கருவி தேசிய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக கேரள மாநிலத்தில் பயன்படுத்தும் மாதிரி கருவி பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 360 பயனாளிகளில் 40 பயனாளிகள் மகளிர் ஆவார்கள். 18 வயது முதல் 40 வயது உள்ள ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்படுகிறது. தலா ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள இக்கருவிகள் பயிற்சி பெறுவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பயிற்சி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சுந்தர்ராஜ், திட்ட உதவியாளர் (வேளாண்மை பொறியியல்) முகமது இஸ்மாயில், தொழில்நுட்ப வல்லுனர் (வேளாண்மை விரிவாக்கம்) செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story