சிவசேனாவுடன் கூட்டணி முறிய சஞ்சய் ராவத் தான் காரணம் பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி


சிவசேனாவுடன் கூட்டணி முறிய சஞ்சய் ராவத் தான் காரணம் பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2019 3:30 AM IST (Updated: 24 Nov 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி முறிய சஞ்சய் ராவத் தான் முழு காரணம் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி அளித்து உள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த மாதம் நடந்த தேர்தலில் சிவசேனா- பாரதீய ஜனதா, இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி கட்சி கள் மாநிலத்தில் 161 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியமைக்க பெரும்பான்மை இருந்த நிலையில் சிவசேனா எங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தவறி விட்டது.

மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு 50-50 பார்முலாவை கருத்தில் கொண்டு சிவசேனா பேசி வந்ததால் ஆட்சி அமைப்பதில் முரண்பாடு ஏற்பட்டது. மேலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட சிவசேனா சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேரம் பேசி வந்தது.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் முன்பு எங்களுடன் சிவசேனா எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இந்துத்துவா கொள்கை மற்றும் வீர சாவர்கருக்கு பாரத ரத்னா விருது போன்ற கோரிக்கைகளை விடுவித்து விட்டு மற்ற கூட்டணி கட்சிகளுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சியை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் முற்றிலும் அழித்து உள்ளார்.

இப்போதாவது அவர் தனது வாயை மூடிக்கொள்ள வேண்டும். அவரால் தான் சிவசேனா கட்சி எங்களை விட்டு பிரிந்து சென்றது என மராட்டிய மக்கள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story