கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலத்தில் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கம்


கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலத்தில் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று அதிகாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

மேலும் பாம்பன் பகுதியில் நேற்று வழக்கத்தைவிட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததுடன் பாலத்தில் ரெயில்கள் செல்லும் போது ரெயில் பெட்டியின் உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக மேல் நோக்கி சீறி எழுந்தன.

ரெயில் பயணிகள்...

இதன் காரணமாக நேற்று ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் வழக்கத்தை காட்டிலும் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. ரெயில் பெட்டி உயரத்திற்கு கடல் அலைகள் சீறி எழுந்தததை ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த ஆச்சர்யத்துடனும், ஒருவித அதிர்ச்சியுடனும் பார்த்தனர்.

இதே போல் மண்டபம் கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் கடல் அலைகள் தடுப்பு சுவரையும் தாண்டி ஆக்ரோஷமாக மேல் நோக்கி சீறி எழுந்தன.

Next Story