குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
காரைக்குடி காளவாய்பொட்டல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து நீரை அப்புறப்படுத்தக்கோரி நகராட்சி அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி 30-வது வார்டு பகுதியில் உள்ளது காளவாய்பொட்டல் பகுதி. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தவிர இந்த பகுதியில் கழிவுநீர் வெளியேற போதுமான கால்வாய்கள் இல்லாததால் மழைக்காலங்களில் சாரல் மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி பல நாட்களாக அப்படியே இருக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் பருவ மழையையொட்டி காரைக்குடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள், தெருக்கள் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
உடனடி நடவடிக்கை
இந்த மழைநீரை வெளி யேற்றுவதற்கு கால்வாய் வசதி இல்லாததால் தற்போது தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நமது உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரகாஷ் தலைமையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட காளவாய் பொட்டல் பகுதி பெண்கள் காரைக்குடி நகராட்சிபொறியாளர் ரெங்கராஜனை சந்தித்து குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன், அப்பகுதி மக்களை சந்தித்து தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story