முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.28¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் 21 ஆயிரத்து 524 பயனாளிகளுக்கு ரூ.28¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
செய்யாறு,
முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின்கீழ் செய்யாறு தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தபடி முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 12 தாலுகாகளிலும் நடத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 46 ஆயிரத்து 418 மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக தகுதியுடைய மனுக்கள் மீதான நடவடிக்கை மேற்கொண்டனர்.
செய்யாறு தொகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் 4 ஆண்டுகளில் ரூ.83 கோடியில் சாலைபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ.95 லட்சம் நிதி ஓதுக்கப்பட்டு, விரைவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்குவதற்காக கூழமந்தல் பேசும்பெருமாள் கோவிலில் ரூ.40 லட்சத்தில் தங்கி ஓய்வெடுக்க அறைகள் கட்டப்பட உள்ளது. விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் செய்யாறு வழியாக கோவை, கும்பகோணம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு விரைவு பஸ் இயக்கப்படும். மக்களின் நலனுக்காக செயல்படும் அ.தி.மு.க அரசிற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசபாபதி, செய்யாறு உதவிக்கலெக்டர் கே.விமலா, நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன், டி.கே.பி.மணி, எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, ஏ.ஜனார்த்தனன், எம்.மகேந்திரன், டி.பி.துரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதன்படி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 33 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 524 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. செய்யாறு தொகுதியில் ரூ.14 கோடியே 84 லட்சம் மதிப்பில் 4 ஆயிரத்து 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
செய்யாறு தொகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் 4 ஆண்டுகளில் ரூ.83 கோடியில் சாலைபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ரூ.95 லட்சம் நிதி ஓதுக்கப்பட்டு, விரைவில் குடமுழுக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்குவதற்காக கூழமந்தல் பேசும்பெருமாள் கோவிலில் ரூ.40 லட்சத்தில் தங்கி ஓய்வெடுக்க அறைகள் கட்டப்பட உள்ளது. விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் செய்யாறு வழியாக கோவை, கும்பகோணம், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு விரைவு பஸ் இயக்கப்படும். மக்களின் நலனுக்காக செயல்படும் அ.தி.மு.க அரசிற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசபாபதி, செய்யாறு உதவிக்கலெக்டர் கே.விமலா, நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன், டி.கே.பி.மணி, எஸ்.ரவிச்சந்திரன், ஏ.அருணகிரி, ஏ.ஜனார்த்தனன், எம்.மகேந்திரன், டி.பி.துரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story