ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரகடம் சென்னகுப்பம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். பன்னாட்டு தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் 6 வழி சாலையின் அருகே ஒரகடம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
தற்போது இந்த ஏரியின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏரிக்கு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதிக அளவில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story