கும்மிடிப்பூண்டியில் கத்திமுனையில் துணிகள் திருடிய 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி பஜார் துணிக் கடையில் கத்திமுனையில் துணிகள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் துணிக் கடை நடத்தி வருபவர் திண்டுக்கல்லை சேர்ந்த சையத் அபுதாகீர் (வயது 32). இவரது கடைக்கு கடந்த மாதம் 14-ந்தேதி 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ரூ.39 ஆயிரத்திற்கு துணிகளை வாங்கினர். காசாளர் இப்ராஹிம் (32) அவர்களிடம் துணிக்கான பணத்தை கேட்டபோது கத்தி முனையில் அவரை மிரட்டி விட்டு அவர்கள் 4 பேரும் துணிகளை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கத்திமுனையில் துணிகளை திருடி சென்ற நபர்களை தேடி வந்தனர்.
இதில் தொடர்புடைய புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த நடராஜ் (28), ரிஸ்க் பாஸ்கர் (30), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஜெகன் (28) மற்றும் நாகராஜ் (27) ஆகியோரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story