கும்மிடிப்பூண்டி அருகே தேவாலயத்தில் புகுந்து வாலிபர் தாக்கியதில் 3 பேர் படுகாயம்


கும்மிடிப்பூண்டி அருகே தேவாலயத்தில் புகுந்து வாலிபர் தாக்கியதில் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Nov 2019 5:10 AM IST (Updated: 24 Nov 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தேவாலயத்தில் புகுந்து வாலிபர் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தில் தேவலாயம் உள்ளது. நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த சத்யா (வயது 33) என்பவர், மண் அள்ள பயன்படுத்தும் இரும்பால் ஆன பொருளுடன் தேவாலயத்திற்குள் புகுந்து ஜன்னல் கண்ணாடி, மின்சாதனங்கள் மற்றும் சில பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க சென்ற பாதிரியார் ஞானதுரை (48), அவரது தாய் சாந்தம்மாள்(70) மற்றும் அங்கு இருந்த தியாகராஜன்(34) ஆகியோரையும் தாக்கி உள்ளார். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் ஒன்று கூடி தேவாலாயத்தில் தாக்குதல் நடத்திய சத்யாவை திருப்பி தாக்கியதில் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதில் ஞானதுரை, சாந்தம்மாள், தாக்குதலில் ஈடுபட்ட சத்யா ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தியாகராஜன் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் சத்யா மனநிலை சரியில்லாதவர் என்பதும் அதற்காக அவர் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story