ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவி - ஒட்டன்சத்திரம் வியாபாரி அசத்தல்
கடந்த மாதம் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் என்ற சிறுவன் பலியானதுதான்.
இந்த சம்பவத்தில் தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை துறை வல்லுனர்கள் அறிவியல் தொழில்நுட்ப கருவிகளை கொண்டு சிறுவனை காப்பாற்ற மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் பலனளிக்கவில்லை என்பதே இறுதியான வேதனை.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 நாட்கள் ஆகியும் சிறுவன் சுஜித்தை உயிரோடு மீட்க நம்மிடம் போதிய கருவிகள் இல்லாததுதான், அவன் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து மக்களிடையே பரவலாக பேசப்பட்ட கருத்து என்னவென்றால், பல ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரன், சூரியன் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்வதைவிட பூமியில் வாழும் மனிதன் பேரிடர் மற்றும் ஆபத்தில் சிக்கி கொண்டால் அவனை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து அறிவியல் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளை தொடர வேண்டும் என்பதுதான். அதோடு மட்டுமின்றி இதுதொடர்பாக முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் ஏராளமான விமர்சனங்களும் எழுந்தன. இந்தநிலையில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் மீட்கும் வகையிலான கருவியை காய்கறி வியாபாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார் என்றால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது அல்லவா. ஆம் உண்மையும் அதுதான். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் (வயது 37), ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் சிறு வயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்துவிட்டதால், தாய் சிங்காரி மிகுந்த கஷ்டத்துடன் என்னை படிக்க வைத்தார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக பிளஸ்-2 வரையே நான் படித்தேன். அதன்பின்னர் எல்.ஐ.சி.யில் பகுதி நேர ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறேன். எனினும் முழுநேர வேலையாக எங்கள் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். தற்போது எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பள்ளி படிக்கும் காலத்திலேயே எங்கள் ஊரில் உள்ள மெக்கானிக் கடையில் பழுதான மோட்டார் சைக்கிளை கழற்றி, அதில் என்ன பழுதாகி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வேன். மேலும் நண்பர்கள் எல்லாம் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போதே நாமும் பேட்டரியில் சிறிய விமானம் செய்து பறக்கவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும் அதற்கு உரிய பயிற்சி இல்லாததால் வியாபாரம் நோக்கியே வாழ்க்கை நகர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. இந்த சம்பவத்தின்போது அச்சிறுவனின் கைகளை பிடித்து மேலே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும், போதிய கருவிகள் இல்லாததால் அவனை காப்பாற்ற முடியாதது பெரும் வேதனை அளித்தது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் குழந்தையின் கைகளை இறுக பற்றி பிடித்து தூக்கும் வகையில் கருவி ஒன்றை வடிவமைக்க திட்டமிட்டேன்.
இதற்காக இரும்பு பட்டறையில், 1½ அடி நீளமுள்ள 2 கம்பிகளை எடுத்து ‘ப’ வடிவில் அதை இணைத்தேன். இந்த 2 கம்பிகளுக்கு இடையிலான தூரம் 4 ‘இன்ச்’ (12 செ.மீட்டர்). பின்னர் அந்த கம்பியின் கீழ் பகுதியில் குழந்தையின் கைகளை கவ்வி பிடித்து தூக்கும் வகையில் 2 கம்பிகளை வடிவமைப்பு செய்து அதில் பொருத்தினேன். அதனுடன் ‘செயின்’ மற்றும் பற்சக்கரம் இணைப்பை, கைகளை கவ்வி பிடித்து தூக்கும் பாகத்துடன் இணைத்தேன். பற்சக்கரம் வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தக்கூடிய 12 வோல்ட் திறனுள்ள பேட்டரியை அந்த கருவியில் பொருத்தினேன். அதன் மூலம் பற்சக்கரம் செயல்படும்போது குழந்தையின் கைகள் கெட்டியாக பிடிக்கப்படும். இந்த மோட்டாரை ஆழ்துளை கிணற்றின் மேற்பகுதியில் இருக்கும் இயக்கும் வகையில் வயர் இணைக்கப்பட்டு ‘சுவிட்ச்’ வைக்கப்படும். இந்த கருவியை ஆழ்துளை கிணற்றின் உள்ளே செலுத்தும் வகையில் அதன் மேற்புறத்தில் இரும்பு கம்பியை இணைத்து சிறுவன் சிக்கி இருக்கும் பகுதி வரை கொண்டும் செல்லும் வகையில் வடிவமைத்தேன். ஏனென்றால் கயிறு என்றால் அறுந்துவிடும். அதன் தொடர்ச்சியாக அதில் விளக்கு மற்றும் கேமரா பொருத்தி குழந்தையை மீட்கும் பணிக்கு பயன்படுத்தலாம். இந்த கருவியின் எடை 1½ கிலோ மட்டுமே. எனவே இதை எளிதாக கொண்டு செல்ல முடியும். இந்த கருவியை உருவாக்க ஆகிய செலவு வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே. மேலும் வருங்காலத்தில் பேட்டரியுடன் கூடிய பாராகிளைடர் செய்து அதில் பறக்க வேண்டும். அதற்கான தயாரிப்பு பணிகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story