துபாய்க்கு சென்ற மகன் கடன் வாங்கியதால் தந்தை தற்கொலை
துபாய்க்கு சென்ற மகன் கடன் வாங்கியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 65). கூலித்தொழிலாளி. அவருடைய மகன் கார்த்திகேயன். இவர், துபாயில் வேலை செய்து வருகிறார். அங்கு அதிகப்படியாக கடன் வாங்கியதாக தெரிகிறது.மேலும் தான் வாங்கிய கடனை அடைக்க பணம் கேட்டு ஆதிநாராயணனுக்கு கார்த்திகேயன் தொல்லை கொடுத்தார். துபாய்க்கு சென்ற மகன், அங்கு வேலை செய்து தனக்கு பணம் அனுப்புவார் என்று ஆதிநாராயணன் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ஒரு கட்டத்தில் தனக்கு பணம் தராவிட்டாலும் பரவாயில்லை, தன்னிடம் கேட்காமல் இருந்தாலே போதும் என்று நினைத்து வேதனை அடைந்தார். இதனால் மனம் உடைந்த ஆதிநாராயணன், தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி ஜெயந்தி பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Tags :
Next Story