வாலாஜாபாத்தில் ரூ.10 கோடி நிலம் விற்பனை சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு
வாலாஜாபாத்தில் ரூ.10 கோடி நிலம் விற்பனை செய்தது தொடர்பாக சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாலாஜாபாத்,
வாலாஜாபாத் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது தந்தை பிரகாசமும், சகோதரர் ராமலிங்கமும் சேர்ந்து காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத், வல்லப்பாக்கம் போன்ற இடங்களில் கூட்டாக சில இடங்களை வாங்கி இருந்தனர். இந்த சொத்து ஆவணங்கள் வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் ராமலிங்கம் மற்றும் உறவினர்கள் ரேவதி, சரத்பாபு, மதன்ராஜ், லட்சுமணன், புஷ்பராஜ் ஆகியோர் இணைந்து பிரபாகரனுக்கு தெரியாமல் போலியான ஆவணங்களை தயாரித்து ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தை விற்று விட்டனர்.
இது பிரபாகரனுக்கு தெரியவந்தது. மேலும் இதற்கு வாலாஜாபாத் சார் பதிவாளர் சந்திரனும் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.10 கோடி நிலத்தை விற்க உடந்தையாக இருந்த வாலாஜாபாத் சார் பதிவாளர் சந்திரன் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பிரபாகரன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சார் பதிவாளர் சந்திரன், ரேவதி, சரத்பாபு உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story