பண்ருட்டி ஊராட்சியில் பயன்பாடின்றி காணப்படும் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி


பண்ருட்டி ஊராட்சியில் பயன்பாடின்றி காணப்படும் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி
x
தினத்தந்தி 25 Nov 2019 3:45 AM IST (Updated: 25 Nov 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

படப்பை,

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் ஒரு ஊராட்சிக்கு ஒரு குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்ருட்டி ஊராட்சியில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் கால்நடைகளுக்காக தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். அங்கு வரும் கால்நடைகள் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும். இந்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டியில் சில நாட்கள் மட்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது. தற்போது தண்ணீர் நிரப்ப படாமல் பயன்பாடின்றி காணப்படுகிறது.

தண்ணீரை குடிக்க வரும் கால்நடைகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றன. இந்த குடிநீர் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைத்து பாரமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ருட்டி ஊராட்சி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story