தஞ்சை அருகே, முன்விரோதம் காரணமாக ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை 5 பேர் மீது வழக்கு
தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக ஜாமீனில் வந்த ரவுடி வெட்டக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது35). இவர் சொந்தமாக மாட்டு பண்ணை வைத்து பராமரித்து வந்தார். இவருடைய மனைவி ராஜலட்சுமி, மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
மாடுகளின் தீவனத்திற்காக தினமும் கூத்தாஞ்சேரியில் உள்ள ஒரு பண்ணைக்கு புல் அறுக்க மணிகண்டன் செல்வது வழக்கம். நேற்றுகாலை புல் அறுப்பதற்காக பண்ணைக்கு மணிகண்டன் சென்றார். அங்கு அவர், புல் அறுத்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மணிகண்டனை சுற்றி வளைத்தது.
கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்தபோது அவரை சரமாரியாக அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டி விட்டு மோட்டார் சைக்கிள்களில் 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர். தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து, மணிகண்டனின் மகள்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டன் உடலை பார்த்து
கதறி அழுதனர்.. பின்னர் இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
5 பேர் மீது வழக்கு
மேலும் மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிதுதூரம் ஓடிசென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து மணிகண்டன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் மணிகண்டனின் தாய் காளியம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் துலுக்கம்பட்டியை சேர்ந்த ராஜா, சுபாஷ், அருள்மொழி பேட்டையை சேர்ந்த அய்யப்பன், அசோக், தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த சுரேஷ்கண்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
துலுக்கம்பட்டியில் உள்ள மதுரைவீரன் கோவில் திருவிழா கடந்த ஆடி மாதத்தில் நடந்தது. திருவிழாவில் கிடா வெட்டப்பட்டது. அந்த கறியை பரிமாறி கொள்வதில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக மணிகண்டன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கைகலப்பு ஏற்பட்டு, அடிதடி நடந்தது.
பல்வேறு வழக்குகள்
இதில் மணிகண்டன் தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது நண்பரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். உடனே நண்பர் தனது ஆதரவாளர்களுடன் வந்து மணிகண்டனை தாக்கியவர்களை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் 30 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த முன்விரோதம் காரணமாக இவரை கொலை செய்வதற்காக எதிர்தரப்பினர் இவரை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் மணிகண்டன் தனியாக புல் அறுக்க சென்ற தகவலை ஒருவர், எதிர்தரப்பினருக்கு தெரிவித்ததால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மணிகண்டனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும அவர் பெயர் உள்ளது.
மேற்கண்ட தகவல் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story