துடியலூர் அருகே, குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் - பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு


துடியலூர் அருகே, குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் - பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Nov 2019 3:45 AM IST (Updated: 25 Nov 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துடியலூர்,

கோவைமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடிவனப்பகுதியில்இருந்து வெளியேறிகிராமப்பகுதிக்குள்அடிக்கடி புகுந்து விடுகின்றன. மேலும் விவசாய நிலங்களில் புகுந்துபயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருவதுதொடர் கதையாகிவருகிறது.

துடியலூர்பகுதியில் கடந்த சிலவாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள்வனப்பகுதியில்இருந்து வெளியேறிதுடியலூர்அருகே உள்ளவரப்பாளையம்பகுதிக்குள் புகுந்தன. பின்னர் அங்குள்ளபயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்ததோடு, மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

குடியிருப்பு பகுதியில்யானைகள்உலாவந்ததால்அந்தப்பகுதியில்உள்ள நாய்கள் குரைத்தன. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்துபார்த்தனர். அப்போது 2 காட்டு யானைகள்நிற்பதை கண்டதும்அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் வனத்துறையினருக்குஉடனடியாக தகவல்கொடுத்தனர்.அதன்பேரில்வனத்துறையினர் சம்பவஇடத்துக்குவிரைந்துசென்றுகாட்டு யானைகளைவனப்பகுதிக்குள்விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போதுஅந்த காட்டுயானைகள், வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை நோக்கி வேகமாகஓடிவந்ததோடுஅவர்களை துரத்தியது. இதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் கழித்து,வனத்துறையினர் பட்டாசுவெடித்து காட்டுக்குள்விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரத்துக்கு பிறகு, காட்டு யானைகள்வனப்பகுதிக்குள்விரட்டியடிக்கப்பட்டன. காட்டு யானைகள்ஊருக்குள்புகுந்து பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரை விரட்டிய சம்பவம்அந்தப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கோவை பூச்சியூரில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் புகுந்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

Next Story