மீஞ்சூர் அருகே 2 வீடுகளில் 15 பவுன் நகை திருட்டு
மீஞ்சூர் அருகே 2 வீடுகளில் 15 பவுன் நகை திருடப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு 2 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய செல்வம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 ஆயிரம் போன்றவை மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.
மேலும் அதே பகுதியில் வசிக்கும் சாம்ராஜ் (40) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story