மாவட்ட செய்திகள்

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள் + "||" + Police search for 4-pound chain-mysterious mystery woman in Tirupur

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்
திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி கலாவதி (வயது 57). இவர் நேற்று முன்தினம் ஆர்.வி.இ. லே அவுட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.


இந்நிலையில் கலாவதியை பார்த்த அவர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்துக்கொண்டனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த மர்ம ஆசாமி திடீரென கலாவதி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார்.

போலீஸ் தேடுகிறது

உடனே கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச்சென்றனர். இதில் நிலைதடுமாறிய கலாவதி கீழே விழுந்தார். தொடர்ந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். இருப்பினும் அவர்களை பிடிக்கவில்லை. இது குறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கிலியும், கயிறும்
எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், கயிறு களின் தேவையை குறைக்க முடியவில்லை. சங்கிலிகளின் பலனும் அவசியமாக இருக்கிறது. மனிதன் கயிறுகளையும், சங்கிலிகளையும் பயன்படுத்தியது மிக முக்கிய வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகும்.
2. நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 3 பேர் கைது
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை போலீசர் கைது செய்தனர்.
3. ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ராஜாக்கமங்கலம் அருேக நடந்து சென்ற மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5¼ பவுன் சங்கிலி பறிப்பு
கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து 5¼ பவுன் நகைைய பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. சேலத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.