போலீசாரின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உறுதி
சலவை படி, மருத்துவ காப்பீடு உள்பட போலீசாரின் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபோலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாஉறுதி அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருடன் கலந்தாய்வு கூட்டம் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கி காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிகா பட், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட போலீசார், காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும், போலீசாருக்கு வழங்கப்பட்டு வரும் சலவை படியை ரூ.80-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுவை காவல்துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வரும்போது அதனை ஓய்வுபெறும் போலீசாரும் பயனடையும் வகையில் இருக்கவேண்டும். காவல்துறையினருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். சம்பள ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, காவல்துறையினர் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story