நாகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
நாகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அவுரித்திடலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சங்கத்தினர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து நீக்கக்கோரி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கலைச்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் விஜயேந்திரன், முருகேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து நீக்கி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவை கொண்டு வந்து மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவுரிதிடலில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு பப்ளிக் ஆபீஸ் சாலை, வெளிப்பாளையம் வழியாக கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தனர். அங்கு கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story