ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து - விழிப்புணர்வு பிரசாரம்


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து - விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். எமன், சித்திரகுப்தன், ரம்பை, ஊர்வசி மற்றும் மேனகை வேடம் அணிந்த கலைஞர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சியை நடத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர் விபத்தில் பலியானது போன்றும், அதனை கண்டு அவரது மனைவி கதறி அழுவதை போன்று நடித்து காட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் ஆகியோர் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

Next Story