துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் துப்புரவு தொழிலாளர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு 25 மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிக்கொடை ரூ.50 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். 12 மணி நேரம் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு அதிக ஊதியம் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 526 ஊராட்சிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச்செயலாளர் சந்தானம் தலைமை தாங்கினார். இதில், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், எல்லாபுரம், பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அவர்கள் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு வழங்கினர்.

Related Tags :
Next Story