மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று நடந்தது.
பெரம்பலூர்,
மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜீவ்காந்தி, பொருளாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கிறிஸ்டோபர்திலக், மேலிட பொறுப்பாளர் ஜான்அசோக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜிமூக்கன் வரவேற்றார். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story