ஓசூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி நிர்வாகி கைது
ஓசூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் குருதத் (வயது 61) என்பவர் நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த கையெழுத்து சிறப்பு பயிற்சி வகுப்புக்கு, மற்றொரு தனியார் பள்ளியில் இருந்து, 10 வயதான 5-ம் வகுப்பு மாணவி வந்திருந்தார். இந்த நிலையில் அந்த மாணவி கையெழுத்து வாங்குவதற்காக பள்ளி நிர்வாகி குருதத் அறைக்கு சென்றார். அப்போது அந்த மாணவிக்கு, குருதத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பி வந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.
பள்ளி நிர்வாகி கைது
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி நிர்வாகி குருதத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story