ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து: பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டம் - அதிகாரிகள் வராததால் சாலைமறியலில் ஈடுபட்டனர்
வேலூர் அருகே ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டனர். அதிகாரிகள் யாரும் வராததால் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள துத்திக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை 182 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அதிகாரிகளிடத்தில் மனுகொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாகவும், ஒருவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்தும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும் நேற்றுகாலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர். அதனை ஏற்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டநேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் பென்னாத்தூர்- அமிர்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்துக்கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் விரைந்துசென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சிறிதுநேரத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் நெடுஞ்செழியன், கலைச்செல்வி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 12 மணியளவில் பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது பள்ளிக்குள் சென்ற பெற்றோர் அங்குள்ள சத்துணவு மையத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு புழுக்களுடன் அரிசி இருந்தது. மேலும் காய்கறிகள் அழுகிய நிலையில் இருந்தன. வெள்ளிக்கிழமை சமைத்த உணவும் அப்படியே இருந்தது. இதைபார்த்த பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story