காஞ்சீபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது


காஞ்சீபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 3:15 AM IST (Updated: 26 Nov 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் காவலான் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கே.ஜெயக்குமார், லெனின் உள்பட திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தவகல் கிடைத்ததும் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.

Next Story