நாமக்கல்லில், சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 44 பேர் கைது


நாமக்கல்லில், சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 44 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2019 10:15 PM GMT (Updated: 26 Nov 2019 6:38 PM GMT)

நாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்களை மூடுவதையும், இணைப்பதையும் கைவிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக அகவிலைபடியுடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு அரசு துறையில் உள்ள காலியிடங்களில் பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்ட பொருளாளர் சரோஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலி யுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பி சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் 28 பெண்கள் உள்பட மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story