பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி - தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி - தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2019 5:00 AM IST (Updated: 27 Nov 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு சரிவர செல்லாததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த 9-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் நேரு நகர், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகள் புஷ்பா (வயது 14). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

புஷ்பா, கடந்த சில நாட்களாக சரவர பள்ளிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் அவரது தாயார், புஷ்பாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி புஷ்பா, நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story