சாம்பார் வெங்காயம் விலை புதிய உச்சத்தை தொட்டது கிலோ ரூ.150-க்கு விற்பனை
வேலூரில் சாம்பார் வெங்காயம் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வேலூர்,
பொதுமக்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடிய வெங்காயத்தின் விலை கடந்தசில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதுவும் மராட்டியம், கர்நாடகத்திலிருந்து வரும் பெரிய வெங்காயத்தின் விலை மிகவும் குறைவாகவே காணப்படும். வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேபோன்று சாம்பார் வெங்காயம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பெரிய வெங்காயத்தில் பழைய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், புதிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சாம்பார் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று அமாவாசை தினம் என்பதால் முருங்கைக்காய் விலையும் உயர்ந்து கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூண்டு விலை ரூ.220-ஆக இருந்தது. மற்ற காய்கறிகளின் விலை வழக்கம்போல இருந்தது.
வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக வேலூர் மார்க்கெட்டில் அதன் விற்பனை 80 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெரிய வெங்காயம் ஒருநாளைக்கு 7 லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை காரணமாக அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரு நாளைக்கு 2 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் வருகிறது. அதுவும் புதிய வெங்காயம், பழைய வெங்காயம் என இரண்டு ரகமாக விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில் பெரிய வெங்காயத்தில் பழைய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், புதிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சாம்பார் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று அமாவாசை தினம் என்பதால் முருங்கைக்காய் விலையும் உயர்ந்து கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூண்டு விலை ரூ.220-ஆக இருந்தது. மற்ற காய்கறிகளின் விலை வழக்கம்போல இருந்தது.
வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக வேலூர் மார்க்கெட்டில் அதன் விற்பனை 80 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story