17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய நான் ஊக்கப்படுத்தினேன்; பிரசாரத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு


17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய நான் ஊக்கப்படுத்தினேன்; பிரசாரத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு
x
தினத்தந்தி 27 Nov 2019 4:45 AM IST (Updated: 27 Nov 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர்.

பெங்களூரு, 

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று சிக்பள்ளாப்பூரில் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், “இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய நான் ஊக்கப்படுத்தினேன். கட்சியின் நலனுக்காக இதை செய்ததை நான் பெருமையாக கருதுகிறேன். கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் நடந்து வரும் ஆட்சி நிலையான ஆட்சியாக மாற வேண்டும். மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். இது பா.ஜனதா ஆட்சியில் தான் சாத்தியம். அதனால் மக்கள் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

Next Story