வால்பாறையில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது


வால்பாறையில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 27 Nov 2019 3:30 AM IST (Updated: 27 Nov 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

வால்பாறை,

வால்பாறை அருகே அய்யர்பாடி எஸ்டேட் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரத்தை கடந்த 19-ந் தேதி மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலை மறைவாக இருந்த 2 பேரை வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படைபோலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம்(வயது 22) என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளியான ரமேசை தேடி வருகின்றனர். 

Next Story