கோட்டார் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கோட்டார் சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. அன்றைய விடுமுறைக்கு ஈடாக 14-12-2019 அன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். விடுமுறை தினத்தன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story