கள்ளக்குறிச்சி : கலெக்டர் கிரண்குராலா அலுவலக பணிகளை தொடங்கினார்


கள்ளக்குறிச்சி : கலெக்டர் கிரண்குராலா அலுவலக பணிகளை தொடங்கினார்
x
தினத்தந்தி 27 Nov 2019 5:52 AM IST (Updated: 27 Nov 2019 5:52 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரண்குராலா நேற்று மாலை பணிகளை தொடங்கினார்

கள்ளக்குறிச்சி, 

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் நேற்று உதயமானது. புதிய மாவட்ட தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.புதிதாக உதயமான மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம், தற்காலிகமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இயங்குகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டர் கிரண்குராலா நேற்று மாலை வந்து அலுவலக பணிகளை தொடங்கினார். முன்னதாக அவரை மாவட்ட வருவாய் அதிகாரி சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story